புதன், 25 ஜூலை, 2012

சீன பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு.


     மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள முயன்ற, சீன பெண்ணுக்கு எட்டாவது மாதத்தில், சீன அதிகாரிகளால் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

     சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி பெற்றுக்கொண்டால், கடும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதன் மூலம், சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

     சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்தவர், பெங் ஜியாமி, 23. முதல் குழந்தை உள்ள நிலையில், இந்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை உருவானது. இதை கேள்விப்பட்ட சுகாதார மைய அதிகாரிகள், அவரை அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். 

     அபராதத்தை கட்டாத காரணத்தால், கடந்த மே 2ம் தேதி, உள்ளூர் சுகாதார அதிகாரிகள், பெங்கை, வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு பிரசவ ஊசி போட்டு, ஏழு மாத சிசுவை வெளியே எடுத்தனர். சிசு வெளியே வந்ததும், அதன் தலையில் ஊசி போட்டு கொன்று விட்டனர்.

     இந்த சம்பவத்துக்கு முன்னதாக, மற்றொரு பெண்ணுக்கும் இதே போன்ற துயரம் நடந்துள்ளது. புஜியான் மாகாணத்தின் டாஜி நகரை சேர்ந்தவர் பான் சுன்யான், 31. இவருக்கு மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயார் நிலையில் இருந்தார். இரண்டாவது குழந்தைக்கு அபராதம் கட்டியுள்ளார். 

     மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள, சீன சட்டத்தில் வழியில்லை எனக் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் பான் சுன்யானை, அவரது கடையிலிருந்து அதிகாரிகள் வலுகட்டாயமாக, வாகனத்தில் அழைத்து சென்று ஊசி போட்டுள்ளனர். சில மணி நேரங்களில், எட்டு மாத சிசு இறந்த நிலையில் நீலமாக பிறந்தது. இதனால், பானும், அவரது கணவரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். 

     மூன்றாவது குழந்தை உருவாகி விட்டநிலையில் இதற்கு அபராதமாக, ஐந்து லட்ச ரூபாய் கட்டியுள்ளனர். இருப்பினும், இந்த கட்டாய கருக்கலைப்பு நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக