முனிவனின் குணம் எதுவோ அதுவே மவுனம் எனப்படும். மவுனம் பேச்சை விட வலிமையானது. மவுனம் சர்வார்த்த ஸாதனம் - எல்லா நன்மைகளையும் பெற மவுனம் சிறந்த சாதனம். மவுனம் கலகம் நாஸ்தி - மவுனமாக இருந்தால் சண்டை, சச்சரவு இருக்காது. பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம் போன்றது.
மோனத்திற்கும், ஞானத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பதை அறிவிப்பதே தட்சிணாமூர்த்தியின் தத்துவம். ஐம்புலங்களில் பேசுவது, புசிப்பது, ஆகிய இரு பணிகளைச் செய்யும் ஒரே புலன் வாய்தான். அதனால்தான் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி என்று நடைமுறையில் நாம் சொல்கிறோம்.
பரம் பொருளை உணர, உகந்த மொழி - மவுனமே. யோக சாம்ராஜ்யத்தின் வாயிற்கதவே மவுனம்தான் என்கிறார் ஆதிசங்கரர். மவுன விரதத்தை முறையோடு கடைபிடிக்க வேண்டும். விரதம் இருக்கும் போது ஜாடை காட்டவோ, பேப்பரில் எழுதிக்காட்டவோ கூடாது. உறங்கக் கூடாது.
மனதை அமைதியாக்கிக் கொண்டு அதை இறைவன் பால் திசை திருப்ப வேண்டும். ஏகாதசி, சோமவாரம், குருவாரம் - இவை மவுன விரதத்திற்கு ஏற்ற நாட்களாகும். உபவாசத்தோடு மவுன விரதமிருப்பது இரட்டிப்பு பலனைத் தரும்.
நன்றி : மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக