அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையிலான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ராணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒபாமா கூறும்போது :
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறைவேற்றும் திறன் கொண்ட தனிநபர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறையில் சிறப்பாக செயலாற்றுவர் என்று எதிர்பார்க்கிறேன். வரும் நாட்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ராணி ராமசாமி ராகமாலா நடன அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார். பரதநாட்டிய கலைஞரான இவர் நடனம் கற்றுக் கொடுப்பதோடு நடன இயக்குநராகவும் இருக்கிறார்.
அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளினால் இவரது கலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்க நடன விழா, மும்பையில் உள்ள தேசிய நடன மையம் ஆகியவற்றில் பங்கேற்று தனது முத்திரையை பதித்துள்ளார்.
மேலும் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர் என்கிற விருதையும் பெற்ற பெருமைக்குரிய இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக