சனி, 21 ஜூலை, 2012

தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான ‘மூகமூடி’ ஆகஸ்ட் 31-ல் வெளியீடு


     யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோ படமான ‘முகமூடி’ திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

     இதில் இயக்குனர் மிஸ்கின், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜீவா, விஜய், நரேன், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இப்படத்தின் ஆடியோ சிடியை விஜய்யும், புனித் ராஜ்குமாரும் வெளியிட்டனர். 

     ‘முகமூடி’ படத்தை இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். இதில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடித்துள்ளார். அவருடன் நரேன், பூஜா ஹெக்டே, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

     சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வரிகளுக்கு கே இசையமைக்கிறார். இந்த ஆல்பத்தில் இனிமையான 3 மாஸ் பாடல்களும், 6 தீம் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 

     இது ஆக்ஷன் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்பதோடு குழந்தைகளைக் கவர்வதாகவும், குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் படமாகவும் அமைந்துள்ளது. 

     இப்படத்தின் பெரும்பகுதி சென்னையிலும், ஐரோப்பாவிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஜீவாவும், நரேனும் இந்த படத்திற்காக குங்ஃபூ பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். 

     இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ஹாங்காங்கைச் சேர்ந்த நிபுணர்கள் சென்னை வந்து இவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். 

     மேலும் ஹாங்காங்கை சேர்ந்த ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஜீவாவுக்கு சூப்பர் ஹீரோ காஸ்டியூம்-ஐ வடிவமைப்பு செய்துள்ளனர். 

     மிஷ்கின், ஜீவா ஆகிய இருவரும் இணையும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக