தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் அனாடமி பாடத்துக்கு பரவலாகவே ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில் மருத்துவப் படிப்பின் அடிப்படைப் பாடங்களான அனாடமி என்று சொல்லப்படும் உடற்கூற்றியல், ஃபாரென்ஸிக் மெடிசின் என்று சொல்லப்படும் தடயவியல் பயன்பாட்டுக்கான மருத்துவம் போன்ற பாடங்களை நடத்தக்கூடிய ஆசிரியர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப் படுகிறது.
தவிர அனாடமி பாடத்தை முறையாகப் படிப்பதற்கு மிக அவசியமாகத் தேவைப்படும் மனித சடலங்களுக்கும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தட்டுப்பாடு காணப்படுகிறது.
போதிய சடலங்கள் கிடைக்காத நிலையில், கிடைக்கும் ஒரு சில சடலங்களை வைத்து பாடம் நடத்தப்படுவதால், அளவுக்கதிமான மாணவர்கள் அவற்றைச் சுற்றி நின்றுகொண்டு ஒழுங்காகப் புரிந்துகொள்ள சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coutesy : BBC Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக