திங்கள், 23 ஜூலை, 2012

நாய்க்கு பிறந்த பூனை!



     நாய்க்கு பூனை பிறக்குமா? வடகொரியாவில் ஒருவர் செல்லமாக வளர்த்த நாய்க்கு பூனை பிறந்திருக்கிறது. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை. அது  நாய்க்குட்டி தான் என்று கால்நடைதுறை டாக்டர்கள் மறுத்துள்ளனர்.

     வடகொரியாவை சேர்ந்தவர் ஜியாங் பியாங் (63). இவர் வளர்த்த செல்ல நாய் குட்டிகள் போட்டன. அவற்றில் ஒரு நாய்க்குட்டி வித்தியாசமாக இருந்தது. பார்ப்பதற்கு பூனை போலவே இருப்பதை பார்த்து ஜியாங் ஆச்சரியம் அடைந்தார்.

      இதுகுறித்து அவர் கூறுகையில், என் செல்ல நாய்க்கு பூனை பிறந்திருப்பது உண்மைதான். இது அதிசயம். பூனை பிறந்ததை பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை. பூனை போலவே மியாவ் சத்தமும் போடுகிறது. அப்படி இருக்கும் போது, அதை எப்படி நாய்க்குட்டி என்று சொல்ல முடியும் என்கிறார்.

     நாய்க்கு பூனை குட்டி பிறந்த தகவல் அறிந்து வடகொரியாவின் பல பகுதிகளில் இருந்து ஜியாங் வீட்டுக்கு வரத் தொடங்கி உள்ளனர். அவர்களும் ஜியாங் சொல்லும் பூனைக் குட்டியை பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.

     ஆனால், கால்நடை துறை டாக்டர்கள் கூறுகையில், மரபணு ரீதியாக நாய்க்கு பூனை பிறப்பதற்கு சாத்தியமே இல்லை என்கின்றனர். நாய், பூனை இரண்டின் மரபணுக்களும் வேறு வேறானவை. ஜியாங் வளர்க்கும் பூனைக்கு பிறந்த குட்டிகளில் ஒன்று பூனை போல இருக்கலாம் என்று சோன்னாம் தேசிய கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் சான் சான்கோ திட்டவட்டமாக கூறுகிறார்.

நன்றி : தமிழ் முரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக