திங்கள், 23 ஜூலை, 2012

முளைப்பயறு கோசுமல்லி.



முளைக்கட்டிய முழு பச்சைப்பயறு - 1 கப், 

துருவிய வெள்ளரிக்காய்      -      1 டேபிள் ஸ்பூன், 

துருவிய கேரட், மாங்காய்   -       1 கப், 

தேங்காய்த்துருவல்               -       அரை மூடி,

உப்பு                                          -       தேவையான அளவு. 

பச்சை மிளகாய்                      -       2 (நறுக்கியது), 

கொத்தமல்லித்தழை             -        சிறிது. 

     முளைகட்டிய பச்சைப் பருப்பை நன்கு வடித்து இத்துடன் துருவிய மாங்காய், தேங்காய், கேரட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளறவும். இதுவே கோசுமல்லி என்பார்கள். மாங்காய் இல்லாவிட்டால் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறலாம். இதை அப்படியே பச்சையாகத்தான் பரிமாற வேண்டும்.

     முளைப்பயறு செய்ய பக்குவம் : 8 அல்லது 10 மணி நேரம் ஊறிய முழு பச்சைப் பயறை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்து மீண்டும் இரவு முழுவதும் ஒரு மூடி போட்டு மூடி கவிழ்த்து வைத்தால் அது முளைத்து விடும். இதைத்தான் முளைப்பயறு என்பார்கள். இது ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு, குழந்தைகளுக்கு அதிக சத்து நிறைந்த உணவும் ஆகும். 

நன்றி : தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக