பிரபலமான பேஷன் பத்திரிகைகள், உலகிலேயே அழகான உதடுகளை கொண்ட பெண் யார், உலகின் கவர்ச்சியான பெண் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை பரபரப்பாக வெளியிடுகின்றன.
உலகிலேயே மிக அழகான உதடுகளை கொண்ட பெண் என்ற ஆய்வுகளில் கண்ணை மூடிக்கொண்டு, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் பெயரை அறிவித்து விடுகின்றனர். பல ஆண்டுகளாக, அழகான உதடுகளுக்கு, ஏஞ்சலினாதான், சொந்தக்காரியாக இருக்கிறார்.
இதேபோல் எப். எம். எச்., என்ற பிரபல பேஷன் பத்திரிகை உலகின் மிக செக்சியான பெண் யார் என்ற ஆய்வை நடத்தி, சமீபத்தில் முடிவுகளை வெளியிட்டது. இதில் ஏகமனதாக 'பாலிவுட்டின் பியூட்டி குயின்' என அழைக்கப்படும் கத்ரினா கைப்தான். இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த பட்டத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அவர் பெறுகிறார். 'உலகின் மிக கவர்ச்சியான பெண்ணுக்கு கத்ரினாவை விட்டால் வேறு ஆள் இல்லையா?' என சர்ச்சையும் எழுந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்துள்ள கத்ரினா, 'எந்த உடை அணிந்தாலும், நான் அழகாக தோன்றுகிறேன். ரசிகர்களும் என்னைத் தான் விரும்புகின்றனர். இதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்தான், சர்ச்சையை கிளப்புகின்றனர்' என பொங்குகிறார்.
தன் அழகை தக்க வைத்துக் கொள்வதற்கு, கத்ரினா மேடம் மேக்-அப்புக்காக எத்தனை லட்சம் ரூபாய் செலவிடுகிறார் என்பது, அவரது மேக் -அப் மேனுக்கு மட்டும்தானே தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக