ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று மயிலாடுதுறை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு இது சோதனை காலம் ஆயிரம் ஆண்டுகளாக நெற்களஞ்சிய மாக விளங்கி பசித்தோருக்கு உணவ ளித்த தமிழகத்தில் இன்று நம் ஒவ்வொருவர் தலையிலும் கத்தி தொங்குவதுபோல் உள்ளது.
கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள அரசு செயல்படுகிறது. கேரள சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் முல்லை பெரியாறில் மாற்று அணை கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
முல்லை பெரியாறில் புது அணை கட்டினால் தமிழகத்தில் 2 1/2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படையும். பிரணாப் முகர்ஜி ராணுவ மந்திரியாக இருந்தபோது இலங்கையில் பலாளி விமான நிலையம் கட்ட இந்திய அரசு உதவுவதாக கேள்விப்பட்டு நான் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கேட்டேன் அப்போது அவர் உதவ மாட்டோம் என கூறினார். ஆனால் இந்திய அரசு உதவி செய்தது.
இலங்கைக்கு உதவி செய்யக்கூடாது என பிரணாப் முகர்ஜியிடம் கூறியபோது இலங்கை உறவு தேவை என்று கூறினார். இதனால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்காது.
மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி என்னிடம் போனில் பேசி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க. அரசின் அணுகுமுறை சிறப்பாக உள்ளது. மக்களுக்கு இலவசங்கள் அளிப்பது தேவையில்லாதது.
நன்றி : மாலைமலர்
என்னை பொறுத்தவரை காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லை
பதிலளிநீக்கு