வியாழன், 19 ஜூலை, 2012

மைக்ரோ வேவ் சமையல உஷார் !


     மைக்ரோவேவ் இல்லத வீடு தற்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது.

     மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாக Dr. மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

     புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr Cristina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார்.

ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும்.

ஆவியில் --- மைக்ரோவேவ் அவனில்

flavonoids -----------------------11% --- 97%

sinapics ---------------------------0% --- 74%

caffeoyl-quinic derivatives-----8% --- 87%

உணவில் ஏற்படும் பாதிப்புக்கள் :

     1. மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது. குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது.

     2. மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.

     3. குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது. 1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.

     4. ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோவேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள்.

     5. மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும்.

மேலும் சில தகவல் :

     சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாகப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது.

     சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோவேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன். குறிப்பாக நீர் மூலக் கூறுகளை. இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம், புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது.

     மைக்ரோவேவ் அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர், கொழுப்பு, சர்க்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும்.

மேலும் அறிய : How Microwave Cooking Works?

மைக்ரோ வேவும் உலோக பாத்திரமும் :

     ஆனால் உலோகப் பாத்திரங்கள், அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது.

மைக்ரோவேவில் முட்டை வெடிக்குமா?

     மைக்ரோவேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும்.

மைக்ரோ வேவில் தண்ணீர் வெடிக்குமா?

     சுத்தமான தண்ணீரை மைக்ரோவேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகாமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்குமேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது. இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும்போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை.

     மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப்கார்ன் தயாரிக்கும்போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள், வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது. மேல் விபரம் இங்கே

Induction cooker :

     Induction cookerன் செயல்பாடு அடிப்படையில் microwave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. microwave ovenல் பாத்திரம் சூடாவதில்லை. உணவின் நீர் மூலக்கூறுதான் சூடாகிறது. இதில்தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது. ஆனால் Induction cookerல் அடுப்பு சூடாவதில்லை. ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச் செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோவேவ் அவனுக்குள்ள பிரச்சனை இவனுக்கு இல்லை. ஆனால் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் மொபைல் போன் ஆனாலும் பார்த்து, கேட்டு உபயோகிக்கவும்.

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!!
தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! 
ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!

     மைக்ரோவேவ் அவன் இல்லாத வீடே தற்போது இல்லை. அதில் உள்ள நன்மை, தீமைகளை பார்த்து செய்வது சாலச் சிறந்தது. தண்ணீரை Microwave Ovenனில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

     சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல்முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.

     ஆனால், அப்படியொரு அமைப்பே இல்லாதபோது Microwave Ovenகளில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது?

     இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது. மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Ovenனினுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செகண்டுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

     இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

     மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக் கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Oven மூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோவேவினால் அசைக்க இயலாது.

     எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது. ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்பட வேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven னினுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம், மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

     இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven ல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

     சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து,மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

     இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven னினுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

     இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத் தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

     எனவேதான், Microwave Ovenகளில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

மைக்ரோவேவ் அவனில் செய்யக் கூடாதவை :

1. மைக்ரோவேவ் அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு  சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

2. குறுகிய வாயுள்ள பாத்திரம் உபயோகிக்கக்கூடாது.

3. டின் உணவை டீஃப்ராஸ்ட் செய்யக்கூடாது.

4. முட்டையை ஓட்டுடன் சமைக்கக்கூடாது.

5. ரோஸ்ட் செய்யும் போது உப்பு போடக்கூடாது, வறுத்த பின்பு உப்பு போடவும், இல்லாவிடில் கரிந்து, தீய்ந்து விடும்.

6. டீப் ஃப்ரை செய்ய முயற்சிக்கக்கூடாது.

7. ப்ளாஸ்டிக், காகித பொருட்கள் உபயோகிக்ககூடாது, அவை உருகி, எரிந்து போகும்.

8. தண்ணீர் உள்ளே சிந்தக்கூடாது, இதனால் வெளிப்புற கண்ணாடி உடைய வாய்ப்புண்டு.

9. உணவு பொருட்கள் இல்லாமல் மைக்ரோவேவ் அவனை (சும்மா ஓடவிடக்கூடாது) உபயோகிக்ககூடாது. 


நன்றி : இன்று ஒரு தகவல் பக்கம், facebook.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக