புதன், 25 ஜூலை, 2012

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


     சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 7-50 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்புள்ள தங்ககொடிமரத்தில் மீனாட்சி சுந்தர் பட்டரால் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

     விழாவில் முத்துசெல்வி எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, யூனியன் தலைவி அன்னலட்சுமி காளிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், நகர எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அந்தோணி, தொழிலதிபர்கள் சங்கரசுப்பிரமணியன், சீதாலட்சுமி, ராமகிருஷ்ணன், அரசன்சங்கரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கம்மவார் நாயுடு சமூகத்தினர் செய்திருந்தனர்.

     விழாவானது அடுத்தமாதம் 2-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. விழாவையட்டி தினமும் காலை, இரவு அம்பாள் வீதிஉலா நடக்கிறது. மேலும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், பக்திசொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்றவை நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 1-ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

     இதில் சங்கரலிங்கசாமி, கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சிஅளிப்பார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக