வெள்ளி, 13 ஜூலை, 2012

அசோக் லேலண்டு வாகன விற்பனை வளர்ச்சி கண்டது.


     சென்னை : சென்ற ஜூன் மாதத்தில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் ஒட்டு மொத்த வர்த்தக வாகன விற்பனை, 28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,009 லிருந்து, 10 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், ஒட்டு மொத்த வாகன விற்பனை, 27 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது.

     இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 43 சதவீதம் (19 ஆயிரத்து 277 வாகனங்கள்) அதிகமாகும். இருப்பினும், சென்ற ஜூன் மாதத்தில், இந்நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டு வாகன விற்பனை ("தோஸ்த்' வாகனம் நீங்கலாக) 6 சதவீதம் சரிவைக் கண்டு, 8,009 லிருந்து, 7,519 ஆக குறைந்துள்ளது. 

     அதேசமயம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இவற்றின் விற்பனை, 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19 ஆயிரத்து 277 லிருந்து, 20 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது.இதே மாதங்களில், "தோஸ்த்' வர்த்தக வாகன விற்பனை 7,248 ஆக உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக