திங்கள், 2 ஜூலை, 2012

மாத விரதங்கள்: ஆவணி மாதம்



* ஆவணி மாதம் 1-8-12   அன்று அவணி அவிட்டம் வருகிறது. அன்றைய தினம் பூணூல் அணிந்திருப்பவர்கள் புத்தாடை அணிந்து புதிய பக்நோபவீதம் அணிந்து காயத்ரீ ஜெபம் செய்தல் வேண்டும்.
*  9-8-12 அன்று வரும் கோகுலாஷ்டமி கண்ணனுக்கு மிகவும் சிறந்த விரதமாகும். கண்ணன் பிறந்த நாளான அன்று கண்ணனின் சிலையையோ அல்லது படத்தையோ வைத்து அதன் பின்னால் புன்னை இலையை கொத்தாக வைக்க வேண்டும். அன்றைய தினம் விரதமிருந்து கிருஷ்ணருக்கு பிடித்தமான பால், தயிர், வெண்ணெய் முதலியவைகளையும் முறுக்கு, சீடை முதலிய திண் பண்டங்களையும் செய்து வைத்து வழிபாடாக செய்ய வேண்டும்.
* விநாயகர் சதுர்த்தி 19-9-12 வருகிறது. எந்த காரியமாக இருந்தாலும் தடையின்றி செய்து வைப்பவர் விநாயகப்பெருமான். அதனால் தான் அவரை விக்னேஸ்வரர் என்று குறிப்பிடுகிறோம். எந்த சுபகாரியம் துவங்குவதாக இருந்தாலும் இவரிடம் அனுமதி பெறுவது போல ஒரு அர்ச்சனையை செய்து விட்டு துவங்கினால் காரியம் தடையின்றி சுலபமாக முடியும்.
     விநாயக சதுர்த்தி ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசியில் வரும் அன்றைய தினம் களிமண்ணால் செய்த பிள்ளையாரோ வர்ண பிள்ளையாரோ வாங்கி நடு வீட்டில் வைத்து சந்தனம் தெளிவித்து எருக்க மாலை, பூ நூல் முதலியவைகளை அணிவித்து எருக்கம் பூவையும் சார்த்த வேண்டும். பழங்கள், கொழுக்கட்டை,  எள்ளுருண்டை, கடலை, சுண்டல் முதலியவைகளையும் படைத்து விநாயகர் அகவல் விநாயகர் கவசம் முதலியவைகளை பாடி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக