வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

Kollywood மீண்டும் நட்சத்திரா!


     மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மகள் உமா சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவுக்கு வரமுடியவில்லை. இப்போது திருமணம் செய்து கொண்டு கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகள்  நட்சத்திராவை களத்தில் இறக்கினார்  சுமித்ரா. ஓன்றிரண்டு படங்களில் நடித்த அவராலும் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. இது சுமித்ராவை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

     அழகும், திறமையும் இருந்தும் ஏன் நம் மகள்களால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை என்று சில சினிமா நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார் சுமித்ரா. அதற்கு அவர்கள் சொன்ன பதில் சுமித்ராவை ரொம்பவே அப்செட்டாக்கி விட்டதாம்.


     'இரண்டு பிள்ளைகளும் டாப்புக்கு வர முடியாமல் போனதற்கு காரணமே நீங்கள்தான். எப்போதும் அவர்களுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டே இருந்தால் எப்படி அவர்களால் முன்னுக்கு வரமுடியும். அவர்களை சுதந்திரமாக விடுங்கள். முன்னுக்கு வருவாங்க. 


     நாலுபேர்கிட்ட நல்லா பேசி பழகினாத்தான் சினிமால ஜெயிக்க முடியும். பழம் தின்று கொட்ட போட்ட உங்களுக்கு இதுகூட தெரியலையே'ன்னு சொன்னாங்களாம். இப்போது புரிந்து கொண்ட சுமித்ரா, மகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்க நட்சத்திராவே வாய்ப்பு தேடியதில் இப்போது கன்னட படம் ஒன்றிலும், மலையாள படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரமே தமிழுக்கும் திரும்பி வருவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக