சனி, 1 செப்டம்பர், 2012

THIRUMANTIRAM - 31 உள்ளத்தில் இசையானான்.

திருமூலர் சமாதி.

31.                        மண்ணகத் தான்ஒக்கும், வானகத் தான்ஒக்கும்,
                             விண்ணகத் தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்,
                             பண்அகத்து இன்னிசை பாடல்உற் றானுக்கே
                             கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

     மண்ணுலகில் வாழ்வார்க்கு இறைவன் மனித வடிவில் வெளிப்பட்டருளுவான். புவர் உலகத்தவர்க்கு வான வடிவினனாக ஒளி வடிவில் வெளிப்பட்டருளுவான். சுவர் உலகத்தவர்க்கு அப்படியே தேவ வடிவில் வெளிப்பட்டருளுவான். சித்திகளை விரும்பியவர்க்குச் சித்தனாக விளங்குவான். நிறைவு பெற்ற மனத்தின் இடமாக நாதத்தை வெளிப்படுத்தும் அப்பெருமானுக்கு அறிவின் இடமாய் நின்று அன்பு பூண்டிருந்தேன்.

     விளக்கம் :  வேதகம் - மாற்றம், சித்து. உலகம், பூவுலகம், புவர் உலகம், சுவர் உலகம் என மூன்று. இன்னிசைப்பாடல் - நாதம். கண் - இடம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக