ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

THIRUMANTIRAM - 34 எப்போதும் பரவி வ்ழிபடுகின்றேன்.


34.                        சாந்து கமழும் கவரியின் கந்தம் போல் 
                             வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி 
                             ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும் 
                             போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.


      சிவபெருமான் தேவர்க்கு அருளிய உண்மை நெறி கலவைச் சாந்தில் வீசும் கத்தூரியின் மனம் போல் சிவமணம் கமழும். அத்தகைய உண்மையான நெறியில் செல்ல அரிய சுடர் போல் ஒளியை அளிக்கும் அப்பெருமானின் ஆயிரம் பெயர்களையும் நான் நடக்கும் போதும் இருக்கும் போதும் எப்போதும் புகழ்ந்து சொல்லிக் கொன்டிகின்றேன்.



     விளக்கம் :  சாந்து - கலவைச் சாந்து. கவரி - கத்தூரி; ஒரு நறுமணப் பொருள். சிவபெருமான் அருளிய நெறி கலவைச் சாந்தில் உள்ள கத்தூரியைப் போன்று நறுமணம் வீசும். வேந்தன் - சிவபெருமான். அமரர் - தேவர். ஆர்ந்த சுடர் - அருமையான சுடர். போந்தும் - நடக்கும் போதும். இருந்தும் - இருக்கும் போதும். தூயவிண் - சிவவுலகம்.   


Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக