தொலை தூர ரயில்களில் பயணிப்பவர்கள் கையில் பணம் இல்லையெனில் ஸ்மார்ட் கார்டு வாயிலாக டிக்கெட் பெறும் முறையை இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக நாட்டின் பெரு நகரங்களில் ரயிலில் பயணிப்போர் இனி பன்முக ஸ்மார்ட் கார்டினை, அதற்கென அமைக்கப்பட்டுள்ள மிஷன் வாயிலாக டிக்கெட் பெற்று கொள்ளலாம். இது குறித்து ரயில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது : பன்முக ஸ்மார்ட் கார்டுகள் வாயிலாக தொலை தூர ரயில் டிக்கெட் பெறுவது குறித்த திட்டம் கடந்த 2011-12-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் கோ-இந்தியா கார்டு என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இருகட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக டில்லி-கோல்கட்டா, டில்லி-மும்பை ஆகிய நகரங்களிலும் பின்னர் கோல்கட்டா மெட்ரோ நகரங்களை இணைக்கும் ரயில்களில் பயணிப்போர், இனி ஸ்மார்ட் கார்டு வாயிலாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
கோ இந்தியா கார்ட் வைத்திருப்பவர்கள், இன்டர்நெட் மூலம் அதற்கென வைக்கப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ஏ.டி.வி.எம்.) மிஷன் வாயிலாக டிக்கெட்டினை முன்பதிவும் செய்து கொள்ளலாம். டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ரயில்வே தகவல் தொழில்நுட்பத்தின் சார்பில் ரயி்ல்வே தகவல் மையம், புதிய சாப்ட்வேரினை உருவாக்கியுள்ளது. தவிர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்று மணி கணக்கில் டிக்கெட்டிற்காக காத்திருப்பது குறையும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். மேலும் முக்கிய நகரங்களான லக்னோ, அலகாபாத், தன்பாத், ஹவுரா, பரோட ஆகிய நகரங்களுக்கு விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக