வெள்ளி, 7 செப்டம்பர், 2012

THIRUMANTIRAM - 33 அமைதியின்றி வாடுகின்றார்.


33.                        பதிபல வாயது பண்டு இவ் உலகம் 
                             விதிபல செய்துஒன்றும் மெய்ம்மை உணரார்,
                             துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
                             மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.

     தொன்று தொட்டே இவ்வுலகத்தில் கடவுளர் பலர் இருந்தனர். அக்கடவுளரின் வழிபாட்டுக்குரிய விதிகள் பல ஏற்படுத்தியும் உண்மையை உணராதவர் ஆயினர். துதித்துப் பல பாடல்களைப் பாட வல்லாரும் சிவத்துடன் கலந்து இருந்து பெறும் உண்மையான அறிவைப் பெறாதவர் ஆயினார். உள்ளத்தில் அமைதி இல்லாது வாடுகின்றனர்.



     விளக்கம் :  பதி - கடவுள்; தேயம். விதி - வழிபாட்டுக்குரிய செயல்கள். துதிபல தோத்திரம் சொல்ல வல்லார் - முதல்வனை விட்டுப் பல தேவர்களை வணங்கித் துதிப்பவர் எனவும் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக