ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

Dhanush in Raanjhnaa காசியில் ராஞ்சா!


     தனுஷ் இந்தியில் ஹீரோவாக நடிக்கும் படம்  'ராஞ்சா', தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான இசையமைக்கிறார்.

     ‘ராஞ்சா’ இந்தி படத்தின் முக்கிய காட்சிகளை இம்மாதம் டெல்லியில் படமாக்க உள்ள நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகளை தற்போது காசி புனித ஸ்தலத்தில் எடுத்து வருகின்றனர். 




     இதுபற்றி தனுஷ் கூறுகையில் இந்தியில் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றேன். அதுவும் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசைக்காக காத்திருக்கிறேன். 






     காசி புனித ஸ்தலதுக்கு வர தென்னகத்து பக்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்த பட ஷூட்டிங் காசியில் நடப்பதால் இளம் வயதிலேயே புனித தலத்தை தரிசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக