சிம்பு, வரலட்சுமியின் போடா போடி ஒருவழியாக கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. மும்பையில் தற்போது கிளைமாக்ஸை ஷூட் செய்து வருகின்றனர். பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது. அதனால் கிளைமாக்ஸையும் நடனத்தை வைத்தே எடுத்துள்ளனர்.
சிம்பு, வரலட்சுமியுடன் சரத்குமார், ஷோபனா ஆகியோரும் நடனமாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் பாடல் டிரையலரை இன்று படக்குழு வெளியிட்டு உள்ளது. இன்று வெளியான அந்த ஒரு பாடல் 'லவ் பண்லாமா? வேணாமா?' என்று தொடங்குகிறது.
தரண்குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் வெளியான சில மணி நேரத்திற்குள்ளே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டெல்ஃபோர்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தொகுப்பை ஆண்டனி கவனிக்க, கலை இயக்குநராக கிரண் பணியாற்றியிருக்கிறார். வாலி, சிம்பு, நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். நடனம்-கல்யாண், பிரேம், ரக்ஷித், ராபர்ட்.
மிகுந்த பொருட்ச்செலவில் உருவாகியுள்ள இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக