ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

THIRUMANTIRAM - 32 பாடிப்பரவுவோம்.


32.                        தேவர் பிரான், நம்பிரான் திசை பத்தையும் 
                             மேவு பிரான் விரி நீர்உலகு ஏழையும் 
                             தாவு பிரான் தன்மைதான் அறிவார் இல்லை 
                             பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.

     சிவபெருமான் தேவர்கட்குத் தலைவன். எளியவராகிய நமக்குத் தலைவன். அப்பெருமான் சீவகோடிகளிடம் மேல் கீழ் பக்கம் எனப் பத்துப் பக்கங்களிலும் நிறைந்திருப்பவன். அவனே விரிந்த நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் கடந்து விளங்குபவன். அவனது தன்மையை அறிபவர் எவரும் இல்லை. இத்தகைய இறைவனைப் பாடல் பாடி வணங்குவோமாக!

     விளக்கம் :  திசை பத்து - எட்டுத் திசைகளும் மேல் திசையும் கீழ்த்திசையும் கூடப்பத்துத் திக்குகள். விரிநீர் உலகு ஏழு - விரிந்த நீரையுடைய உலகம் ஏழு. பரவுபிரான் - எங்கும் பரவியுள்ள இறைவன். பாடலும் ஆமே - பாடுவோம்; பாட இயலுமோ!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக