திங்கள், 3 செப்டம்பர், 2012

THE DIRTY PICTURE சில்க் வேடத்தில் சனாகான்


     தூக்கில் தொங்கி இறந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்ஸ்‘ என்ற பெயரில் இந்தியில் படமானது. சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.

     இதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குகின்றனர். இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். இதில் நடிப்பது குறித்து சனாகான் கூறியதாவது :-





     சில்க் ஸ்மிதா சிறந்த நடிகை. அவரை குத்துப் பாட்டுக்கு ஆடுபவராக மட்டும் பார்க்ககூடாது சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த படத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். 





     சில்க் ஸ்மிதா வேடம் என்பதால் கவர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. தமிழ், மலையாளத்தில் மேலும் சில படவாய்ப்புகள் வந்துள்ளன.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக