திங்கள், 3 செப்டம்பர், 2012

National Board for Higher Mathematics கல்வி உதவித் தொகை


     நேஷனல் போர்டு ஆஃப் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிறுவனம் வழங்கும் உதவித் தொகை பெற விரும்பும் கணித முதுநிலைப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

     கணித முதுநிலைப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசின் அணுசக்தித் துறையின்கீழ் இயக்கும் நேஷனல் போர்டு ஆஃப் மேத்மேட்டிக்ஸ் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. கணிதத்தில் எம்.ஏ, எம்.எஸ்.சி படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 



     பி.ஏ, பி.எஸ்.சி பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.ஏ, பி.எஸ்.சி இறுதியாண்டுத் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.சி ஆனர்ஸ் படிப்பை முடித்தவர்கள் குறைந்தது  இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     பி.எஸ்.சி ஆனர்ஸ் இறுதியாண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளை முடித்த மாணவர்களும் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

     இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 23 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. மாணவர்களின் தகுதி கருதி, சில நேரங்களில் இந்த வயது வரம்பில் சலுகை தரப்படலாம். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கணிதத்தில் எம்.ஏ, எம்.எஸ்.சி படிப்பில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே, அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக இந்த உதவித் தொகை வழங்கப்படும்.



     இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். நேர்முகத் தேர்வு செப்டம்பர் 22ம் தேதி நடத்தப்படும். பொதுவாக அல்ஜிப்ரா, அனாலிசிஸ், ஜியாமெட்ரி ஆகிய பாடப்பிரிவுகளிருந்து கேள்விகள் கேட்கப்படும். 

     இரண்டரை மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். இந்த எழுத்துத் தேர்வில் கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (Sample question papers PhD Scholarship test 2006 , 2007 , 2008 , 2009201020112012.) அதைப் பார்த்து இந்தத் தேர்வு எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளலாம். (Answers to sample question papers PhD Scholarship test 2012.)



     இந்த உதவித் தொகை பெற தேர்வு பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். முதல் ஆண்டில் இந்த உதவித் தொகை பெறும் மாணவர்கள், இரண்டாம் ஆண்டிலும் தொடர்ந்து உதவித் தொகை பெற வேண்டும் என்றால் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதைப் பொருத்தே இரண்டாம் ஆண்டிலும் இந்த உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். 

     பூர்த்தி செய்யப்பட்ட இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

MA / MSc Scholarship Examination 2012. Examination is on Sept 22, 2012. 

     ஆராய்ச்சி மாணவர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் செமினார் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது போக்குவரத்துச் செலவுகளையும் முழுவதுமாகவோ அல்லது பகுதித் தொகையோ தருகிறார்கள்.

விவரங்களுக்கு: http://www.nbhm.dae.gov.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக