வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தமிழுக்கு வருகிறார் பெங்காலி நடிகை.


     பெங்காலி நடிகை பவுலமி, தமிழ் படத்தில் நடிக்கிறார். நடிகர் பானுசந்தர் மகன் ஜெயந்த் நடிக்கும் படம் ‘நானும் என் ஜமுனாவும்'. அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை பவுலமி நடிக்கிறார்.

     இது பற்றி இயக்குனர்கள் குருராஜாஜெயதமிழ் கூறியதாவது : 16 முதல் 21 வயதுள்ள ஆணுக்கு ஒரு பெண்ணை பார்த்ததும் அவள் மீது வருவது வெறும் ஈர்ப்புதான். அதை காதல் என்று எண்ணிக்கொள்பவர்கள் பெரும்பாலும் பிரச்னைக்குள்ளாகிறார்கள். 

     உண்மையான காதல் வேறு. அதற்கான பருவமும் வேறு. இதை மையமாக வைத்துத்தான் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயந்த் ஜோடியாக நடிக்க நடிப்பு திறமை மிக்க பல புதுமுகங்களை தேடினேன். கிடைக்கவில்லை. 

     பெங்காலி படத்தில் நடித்ததுடன் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கும் பவுலமி பற்றி எனக்கு தகவல் சொன்னார்கள். அவரது புகைப்படத்தை பார்த்ததில் திருப்தி அடைந்தேன். நேரில் அழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்து சில காட்சிகள் நடித்துக்காட்டச் சொன்னபோது யதார்த்தமாக நடித்தார். அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தேன். 

     மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த முகேஷ் இதில் வில்லனாக நடிக்கிறார். விமல்ராஜ், பாண்டு உள்பட பலர் நடிக்கின்றனர். ரபி தேவந்திரன் இசை. விஜய ரமேஷ் ஒளிப்பதிவு. இவ்வாறு குருராஜாஜெயதமிழ் கூறினர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக