புதன், 8 ஆகஸ்ட், 2012

உடல் எடை குறைக்கும் சாக்லேட்டுகள்!


     ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜநொவ்ஸ்கா என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்  75 முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

     இந்த சாக்லேட்டுகளில் எபிகாடெச்சின் என்ற ஆன்ட்டியாக்சிடண்ட் ரெட் வொய்னை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக காணப்படுகிறது. அது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைப்பதற்கு உதவுகிறது. மற்றும் கோகோவில் உள்ள தியோபுரோமின் என்ற பொருள் உடலுக்கு ஆற்றல் தருவதிலும், தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், இரத்த குழாய்களை விரிவடைய செய்வதிலும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பணி வகிக்கிறது. 

     மிக முக்கியமாக கொலஸ்டிரால் அளவை குறைத்து ஸ்டிரோக் பாதிப்பையும் தடுக்கிறது. கோகோவில் இயற்கையாக காணப்படும் பொருள்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் மூளைக்கு தேவையான வேதிபொருள்களை உடலானது உற்பத்தி செய்ய துணைபுரிகிறது. குறிப்பாக உடல் எடை குறைப்பிலும், ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கிறது. 

     எனவே, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் கருப்பு நிற சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடலாம் என லில்லி கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக