திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மீண்டும் சினேகா!


     திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகளுக்கு மத்தியில் கணவர் பிரசன்னாவுடன் ஜோடி போட்டு நடித்து டிரெண்ட் மாற்றுகிறார் சினேகா.

     அஜீத், ஷாலினி, சூர்யா, ஜோதிகா ஜோடிகளில் திருமணத்துக்கு பிறகு ஷாலினியும், ஜோதிகாவும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் காதல் திருமணம் செய்த பிரசன்னா, சினேகா ஜோடி புதிய டிரெண்ட் உருவாக்கி வருகிறது. 

     விளம்பரங்களில் தொடங்கி, திரைப்படம் வரை இந்த ஜோடிகள் இணைந்து நடித்து வருகின்றனர். கார்த்தி நடிக்க வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் சினேகா, பிரசன்னா இணைந்து முக்கிய காட்சியில் நடிக்க உள்ளனர். இதுதவிர பொது மேடைகளிலும் சினேகா, பிரசன்னா ஜோடியாக பங்கேற்கின்றனர். 

     சென்னையில் நடந்த ஆடை அலங்கார நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து மேடையில் அணிவகுத்து வந்தனர். இதன் மூலம் திருமணத்துக்கு பிறகு சினேகா நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்ற பேச்சை பொய்யாக்கி இருக்கிறார். 

     தற்போது ஹரிதாஸ் என்ற படத்தில் சினேகா நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக