செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஆண்ட்ரியா லிப் டு லிப் கிஸ்!


     இளம் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு நடிகை ஆண்ட்ரியா லிப் டு லிப் கிஸ் கொடுத்த போட்டோ இணையதளத்தில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     ‘பச்சைக்கிளி முத்துச்சரம்', ‘ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் நடித்ததுடன் கமலுடன் ‘விஸ்வரூபம்' படத்தில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. இவர்  பின்னணி  பாடகியாகவும்  இருக்கிறார்.   'மன்மதன்  அம்பு'  படத்தில் ‘உ இஸ் த ஹீரோ..', 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் 'உன் மேலே ஆசதான்' உள்ளிட்ட பாடலகளை பாடியுள்ளார்.

     இவரும், தனுஷ் நடித்த ‘3' படத்தில் ‘ஒய் திஸ் கொலை வெறி' பாடலுக்கு இசை அமைத்த அனிருத்தும் லிப் டு லிப் கிஸ் அடிப்பதுபோலவும், ஆண்ட்ரியா கன்னத்தில் அனிருத் அழுத்தமாக முத்தமிடுவது போலவும் 2 போட்டோக்கள் இணையதளத்தில் உலா வருகிறது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

     ஆண்ட்ரியாவுக்கு 27 வயது. அனிருத்துக்கு 22 வயது. அனிரூத் இசையமைக்கும் படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியிருப்பதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை யாரோ நெட்டில் உலவ விட்டிருப்பதாக பேசப்படுகிறது.

     ஆண்ட்ரியா ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தார். சினிமாவில் நடிக்க வந்த பிறகு அவரை விட்டு பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

     என்ன எனக்கு நேரம் பாருங்க! இதையும் ஒரு போஸ்ட் ஆக போட வேண்டியிருக்கிறது. 
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக