சனி, 11 ஆகஸ்ட், 2012

யமுனை நதியை காப்பாற்றுங்கள்!


     அதிக அளவில் மாசடைந்து சுற்றுச்சூழல் நெருக்கடியை சந்தித்து வரும் யமுனை நதியை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

     இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்து கோவில்களின் தேசிய கவுன்சில் தலைவர் பிரிஜ் மோகன்குப்தா, இந்து கவுன்சில் பொதுச் செயலாளர் சத்யா மின்ஹாஸ் ஆகியோர், இந்திய தூதர் ஜெய்மினி பகவதியிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளனர். 


     அப்போது, யமுனையை காப்பாற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தெரிவிக்கும்படி கூறினர். ‘யமுனை நதியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்ய இந்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டும் இவ்வாறே தீர்ப்பளித்தது. 


     எனவே, இந்த நதியின்மூலம் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். நதியின் சீர்கேட்டிற்கு மாசுதான் முக்கிய காரணம்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக