நைஜிரீயாவில் சர்ச்சில் புகுந்த மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் 15 பேர் பலியாயினர். எண்ணெய் வளம் மிக்க ஆப்ரிக்க நாடான நைஜிரீயாவின் லாகோஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று பொதுமக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் சரமாரியாக சுட்டதில் 15 பேர் பலியாகினர். இது குறித்து மாகாண கவர்னர் ஜேக்கப் எடி. கூறுகையில், நைஜிரீயாவில், போக்கோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பினர் , அரசுக்கெதிராக செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றொரு பிரிவினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் தான் ஒகினோ சர்ச்சில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தற்போது இங்குள்ள சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக