ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஜேம்ஸ்பாண்டின் ஸ்கை ஃபால் (SKY FALL)


     இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான 'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து தற்போது அப்பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

     நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில் 'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

     ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது.

     மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

     இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

     உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் 'ஸ்கை ஃபால்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக