சனி, 18 ஆகஸ்ட், 2012

சீனாதானா ஷீலா கவர்ச்சி காட்ட முடிவு!


     சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை.

     இதனால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து அங்கு பிசியான நடிகையாகிவிட்டார். நயன்தாராவுக்கு இணையாககூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் குடும்ப பாங்கான கேரக்டர்களை எதிர்பார்த்தார். 


     தமிழில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்கூட மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது ஷீலாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பிற மொழி பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் படத்துக்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறார்.

     "தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்ததால்தான் பெரிய அளவில் வரமுடியவில்லை. தெலுங்கில் பெரிய படங்களாக நடித்து புகழ் பெற்றேன். எனவே அதே பார்முலாவில் பெரிய படங்களின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். கதை கேட்டு வருகிறேன்" என்கிறார் ஷீலா. 


     இப்போது அவர் தமிழில் கிளாமராகவும் நடிக்க முடிவு செய்து அதற்கென தனி போட்டோஷுட் நடத்தியிருக்கிறார். அதனை விரையில் வெளியிடவும் இருக்கிறார்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக