திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ராஜஸ்தான் அரசு பரிசு!


     ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

     அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.

     ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ராஜஸ்தான் அரசு சார்பில் ரூ. 50 லட்சம் வழங்கப்படும். வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். இதன்மூலம் வெள்ளி வென்ற துப்பாக்கி சுடும் வீரர் விஜயகுமார், மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோர் ரூ. 50 லட்சம் பரிசு பெறுவார்கள்.


     குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா, துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் ஆகியோர் தலா ரூ. 25 லட்சம் பெறுவார்கள்.

     மேலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான கிருஷ்ணபூனியா, வட்டு எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதால் அவர் ரூ. 21 லட்சம் பரிசு பெறுகிறார்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக