புதன், 15 ஆகஸ்ட், 2012

2 கி.மீ. நீள பைபிள்...!


     சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் ஹாலில் ஆண்டு தோறும் பைபிள் கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பைபிள் கண்காட்சி தற்போது நடந்து வருகிறது. இக்கண்காட்சி 12-​ந்தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரமாண்டமான பைபிள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

     உலகின் மிகவும் பெரிய பைபிள் என்ற பெருமையுடைய இப்பைபிளின் எடை 200 கிலோ. இதில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவை உள்ளன. படங்கள் அனைத்தும் வண்ணமயமாக தத்ரூபமாக அச்சிடப் பட்டுள்ளன. இந்த பைபிளை உருளை போன்ற வடிவில் உருவாக்கி உள்ளனர். 

     இப்பைபிளை பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வமுடன் பார்த்துச் செல்கிறார்கள். இதே போல் இக்கண் காட்சியில் உலகின் மிகச் சிறிய பைபிள் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 10 கிராம் எடையில் நூதன முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 1189 அதிகாரங்கள் உள்ளன. புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு போன்றவை இடம் பெற்றுள்ளன.
 

     இதுபற்றி கண்காட்சியை நடத்தும் புத்தக நிறுவன நிர்வாகி ஜோஸ் தாமஸ் கூறும்போது, சிறிய பைபிளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் சிறிய ரக பைபிள்கள் விற்பனைக்கு வைக்கப்படும். தற்போது நடந்து வரும் கண்காட்சியில் பல்வேறு விதமான பைபிள்கள் இடம் பெற்றுள்ளன.


     கிறிஸ்தவ கதைகள் அடங்கிய ஏராளமான புத்தகங்களும் உள்ளன. கிறிஸ்தவ பாடல்கள் கொண்ட சி.டி., டி.வி.டி.க்கள், ஹாலிவுட் கிறிஸ்தவ திரைப்பட டி.வி.டி.க்களும் உள்ளன. கிறிஸ்தவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இக்கண்காட்சியில் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றனர்.

2 கருத்துகள்:

  1. மிக நல்ல பதிவு
    நல்ல தகவல்கள்



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றிகள். மேலும் தங்களுடைய ஆலோசனைகளை தெரிவியுங்கள்.

      நீக்கு