சனி, 11 ஆகஸ்ட், 2012

மலையாளத்தில் சனாகான்!


     பழைய கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் 'தி டர்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

     சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது மலையாளத்திலும் சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அங்கு இப்படத்துக்கு கிளைமாக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார்.

     பூங்கொடி என்ற பெயரில் துணை நடிகையாக வரும் அவர் படிப்படியாக முன்னேறி சுப்ரியா என்ற பெயரில் முன்னணி நடிகையாவதே கதை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சில்க்ஸ்மிதா கெட்டப்பில் வரும் சனாகான் படங்கள் வெளியாகியுள்ளன.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக