திங்கள், 6 ஆகஸ்ட், 2012

நானே பெரிய ஹீரோயின்!


     வித்யாபாலன் நடிப்பை பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் கரீனா கபூர். கரீனா கபூர் நடித்து வெளியாக உள்ள படம் ‘ஹீரோயின்'. இதில் சினிமா நடிகையாகவே அவர் நடித்திருக்கிறார்.

     படத்தில் போதைக்கு அடிமையானவராக அவர் நடித்துள்ளார். முன்னதாக சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்சர்' படத்திலும் அதே போன்ற வேடத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். கிளாமர் வேடத்தை ஏற்று அவர் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

     இந்நிலையில் ‘ஹீரோயின்' படத்தில் கரீனாவின் வேடம் பற்றி தகவல் பரவியதால், ‘வித்யாபாலன் பாணியை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? என்று கேட்டபோது கோபத்தில் சீறினார் கரீனா. 

     அவர் கூறும்போது, ‘நான் யாரைப் பார்த்தும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நானே பெரிய ஹீரோயின்தான். என்னைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். 

     தற்போது பெரிய பேனர் படங்களில் நடித்து வருகிறேன். இந்நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. திருமணத்தை பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக