வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பட்டதாரிகளுக்கு வருமானவரிப் படிவங்கள் நிரப்புநர் பணி.


     அரசுக்கு வரி செலுத்துபவர்களுக்கு வருமானவரிப் படிவங்கள், ஆன்லைன் மூலம் வருமானவரிப் படிவங்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக வருமானவரிப் படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்புவதற்காக வருமானவரிப் படிவங்கள் நிரப்புநர்கள் (Tax Return Preparers - TRPs) உள்ளனர்.

     இந்த பணியிடங்களுக்கு 5 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு என்ஐஐடி மூலம் பயிற்சி அளிக்க உள்ளது. அதற்கான பாடங்களை டாக்ஸ்மேன் என்ற அமைப்பு உருவாக்கியுள்ளது. 

     இந்த பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகமாகவும், ஆன்லைன் மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எந்தவிதமான கட்டணமோ, பயிற்சி கட்டணம் கிடையாது.


     கல்வித்தகுதி : கணிதம், வணிகவியல், மேலாண்மை, வங்கியில் மேலாண்மை, புள்ளியியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 21- 35 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

     மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trpscheme.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக