செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தமிழுக்கு வரும் பிரபுவின் மலையாள படம்


     மலையாளத்தில் பிரபு, அர்ச்சனா கவி நடித்துள்ள படம் ‘பெஸ்ட் ஆப் லக்'. இப்படம் தமிழில் ‘செல்லத் தம்பி' என்ற பெயரில் ரிலீஸாகிறது. நிஷாந்த் இயக்குகிறார்.

     இப்படம் பற்றி அர்ச்சனா கவி கூறியதாவது : வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் பிரபு. ஏழ்மை நிலையில் உள்ள தனது தம்பிக்கு உதவுகிறார். நண்பரின் தூண்டுதலால் வெளியில் வட்டிக்கு கடன் வாங்குகிறார் தம்பி. அந்த பணம் கொள்ளைபோகிறது. 

     பணத்தை திருப்பிகொடுக்க வேண்டிய நிலையில் அண்ணன் பிரபுவிடம் பொய் சொல்லி பணம் வாங்குகிறார். பிறகு அதை மறைக்க நடக்கும் சம்பவங்களே கதை. கைலாஷ், ஊர்வசி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

     கைலாஷ் ஜோடியாக நான் நடிக்கிறேன். அண்ணனிடம் பணம் வாங்கியதை சமாளிப்பதற்காக என்னை தனது மனைவி என்பார். பின்னர் நான் வெளிநாடு சென்றுவிடுவேன். அதன்பிறகு நடப்பதெல்லாம் பரபரப்பும், நகைச்சுவையும் நிரம்பியதாக இருக்கும். இவ்வாறு அர்ச்சனா கவி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக