சனி, 25 ஆகஸ்ட், 2012

தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்.


     மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரிலீசாகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.

     ஹன்சிகாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆண்ட்ரியாவும் கருத்து வெளியிட்டார். இந்த நிலையில் ஹன்சிகா திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்தனர்.









     தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஹன்சிகா ஆதங்கத்தில் உள்ளார். நெருக்கமானவர்களிடம் தமன்னாவை திட்டி பேசுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஹன்சிகா நீக்கத்துக்கு தமன்னா காரணம் அல்ல என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். தமன்னா தெலுங்கில் நடித்த '100 பர்சன்ட் லவ்' படம் ஹிட்டானதால் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக