ஞாயிறு, 28 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 43 பூரணமாக நிறைந்து நிற்பான்!


43.                        அரன்அடி சொல்லி, அரற்றி, அழுது 
                             பரன்அடி நாடியே, பாவிப்ப நாளும்   
                             உரன் அடிசெய்து அங்கு ஒதுங்கவல் லார்க்கு    
                             நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 

     சிவபெருமானின் திருவடிப் பெயராகிய திருவைந்தெழுத்தைத் தூய்மையான மனத்துடன் இடைவிடாமல் துதித்து ஆற்றாமை மிகப் பெற்று முழக்கம் இட்டு அழுது, அவன் தாளினையே நினைவாய்க் கொண்டு, எந்நாளும் வீடுபேற்றைத் தரும் அத்திருவடியில் அடங்கி நிற்கும் வல்லமை வாய்ந்தார்க்கு, அவன் தன திருவடியை நல்குவன்; அந்நல்லவருடன் வேறு இல்லாது நின்று நிறைந்து நிற்பான். 




     விளக்கம் :  அரன் அடி - சிவபெருமானின் திருவைந்தெழுத்து. பாவிப்ப - நினைத்து வழிபட. உரன் அடி - உறுதியான அடி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக