சோதிடவியலில் மொத்த நட்சத்திரங்கள் இருபத்தியெட்டாகும். அவற்றுள் 'அபிஜித்' எனும் நட்சத்திரம் தற்பொழுது வழக்கில் இல்லை. எனவே இருபத்தியேழு நட்சத்திரங்களைக் கொண்டுதான் பலன்கள் கூறுவதும், செயல்கள் துவங்க நாள் குறிப்பதும் செய்யப்படுகின்றன.
மொத்தம் 360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலைகள் கொண்டதாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் எனக்கொண்டு 27 நட்சத்திரங்களுக்கும் 108 பாதங்கள் கணக்கிட்டுள்ளனர். இராசிகள் மொத்தம் பன்னிரெண்டு என்பதால் இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களையும் ஒவ்வொரு இராசிக்கும் பிரிக்கும் பொழுது ஒவ்வொரு இராசிக்கும் ஒன்பது பாதங்கள் வரும். 2½ நட்சத்திரங்கள் கொண்டது ஒரு இராசியாகும்.
இந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை, உருவம், நிறம் போன்ற அடிப்படைத் தன்மைகளை இப்பாடத்தில் காண்போம்.
முதலில் வழக்கில் காணப்படாத அபிஜித் நட்சத்திரம் தொடங்கி ஏனைய நட்சத்திரங்களை வரிசையாகக் காண்போம்.
சோதிடவியலில் நட்சத்திரம் அபிஜித்தின் தன்மை :
1. நட்சத்திரத்தின் பெயர் --- அபிஜித்
2. நட்சத்திரத்தின் வடமொழிப்
பெயர் --- அபிஜித்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை --- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ
அமைப்பு --- நாற்சந்தி
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் --- மகரம் சனி
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம்
பாகம் --- --- ---
இ) நட்சத்திரத்தின் மூன்றாம்
பாகம் --- --- ---
பாகம் --- --- ---
ஈ) நட்சத்திரத்தின் நான்காம்
பாகம் --- --- ---
குறிப்பு : உத்திராடத்தின் 3, 4ம் பாதங்கள்.
திருவோணத்தின் 1, 2ம் பாதங்கள் அபிஜித் நட்சத்திரம் எனப்படும்.
சோதிடவியலில் நட்சத்திரம் அசுவதியின் தன்மை :
2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர் -- அஸ்வினி
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை -- மூன்று
4. நட்சத்திரத்தின் உருவ அமைப்பு -- குதிரை முகம்
5. நட்சத்திரத்தின் இருப்பிடம் -- நகரம்
6. நட்சத்திரத்தின் மண்டலம் -- ---
7. நட்சத்திரத்தின் கணம் -- தேவகணம்
8. நட்சத்திரத்தின் மிருகம் -- ஆண்குதிரை
9. நட்சத்திரத்தின் பறவை -- ராஜாளி
10. நட்சத்திரத்தின் நாடி -- பார்கவநாடி (வலது)
11. நட்சத்திரத்தின் வேதை -- கேட்டை
12. நட்சத்திரத்தின் நிறம் -- கருப்பு
13. நட்சத்திரத்தின் பாலினம் -- ஆண்
பெயர் எழுத்து - இராசி - இராசிநாதன்
14. அ) நட்சத்திரத்தின் முதல் பாதம் -- சு -- மேஷம் -- செவ்வாய்
ஆ) நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் -- சே -- ---- ----
இ) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் -- சோ -- ---- ----
ஈ) நட்சத்திரத்தின் நான்காம் பாதம் -- ல -- ---- ----
15. நட்சத்திரத்தின் விஷநாடி -- 50 நாழிகைக்கு மேல் 4 நாழிகைகள்
16. நட்சத்திரத்தின் பார்வை -- சம நோக்கு
17. நட்சத்திரத்தின் கோள் -- கேது
18. நட்சத்திரத்தின் தசை -- கேது தசை ஏழு ஆண்டுகள்
19. நட்சத்திரத்தின் அதிதேவதை -- அஸ்வினி தேவர்கள்
20. நட்சத்திரத்தில் தோன்றியவர் -- அஸ்வத்தாமன்
21. ரஜ்ஜு -- கால் -- (பாதம்) -- ஆரோகணம்
22. மரம் -- எட்டி
23. தொடர் எழுத்து -- அ
24. தன்மை -- க்ஷிப்ரம்
25. வலம்/இடம் -- வலவோட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக