35. ஆற்றுகில் லாவழி யாகு மிறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை யெட்டோடு
மாற்றுவ னப்படி ஆட்டவுமாமே.
விளக்கம் : மேல்திசை - உச்சி; இங்கு விளங்குவது ஈசான முகம். மாற்று தலாவது - சிரசில் கவிழ்ந்த அட்டதள கமலத்தை நிமிரும்படி செய்தல். ஆற்றுவன் - சன்மார்க்க நெறியில் செல்லச் செய்பவன். அட்டதள கமலம் கவிழ்ந்த நிலையில் இருந்தால் சீவரது எண்ணம் கீழ் முகமாக விளங்கும். அதாவது உலக முகமாய் விளங்கும். இக்கமலமானது நிமிர்ந்த போது அவரது எண்ணம் மேல் முகமாக ஆகும். அவரது ஊர்த்துவ முகமாகிய ஈசானன் ஒளிமயமாக விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக