சனி, 20 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 37 இறைவன் கமலத்தில் வீற்றிருக்கும் திறன்.


37.                        நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்    
                             தானும்நின் றான் தழல்தான் ஒக்கும் மேனியன்;  
                             வானில் நின்று ஆர் மதி போல் உடல் உள்ளு வந்து 
                             ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே.


     நானும் நாள்தோறும் இறைவனை நிலையாய் இருந்து வழிபடுவேன்; அதனால் தழல் போன்ற மேனியையுடைய இறைவனும் வெளிப்பட்டு நிற்பான். அவன் வானத்தில் கலைகள் நிறைந்த திங்களைப் போல உடல் இடமாய் மகிழ்ந்து ஊன் பொருந்திய உடலில் உள்ள சகசிரதள கமலத்தின் பிராண வடிவமாய் உள்ள விதம் இத்தகையதாகும்.



     விளக்கம் : நந்தி - இறைவன். தழல்தான் ஒக்கும் மேனியன் - தீயைப் போன்ற மேனியை உடையவன். வானில் நின்றார் மதிபோல நிற்றல் - வானத்தில் திங்கள் தோன்றுவது போல் உடலில் அண்டாகாயத்தில் மதி ஒளி தோன்றும். அத்தகைய மதி ஒளியானது சகசிரதளத்தில் சிரசின் மேல் நின்று ஒளிர்ந்து கொண்டு விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக