36. அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்புஇலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின்; ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே.
உயிர்கள் அனைவர்க்கும் தந்தையை, இறைவனை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பில்லாதவனை, வேண்டியார்க்கு வேண்டியவற்றை அளிக்கும் வள்ளலை, ஊழியைச் செய்கின்ற முதல்வனை எவ்வகையிலேனும் வழிபடுங்கள். அவ்வகையில் அவன் அருளைப் பெறலாம்.
விளக்கம் : ஆராஅமுது - தெவிட்டாத அமிழ்தம். ஒப்பிலி - தனக்கு ஓர் உவமை இல்லாதவன். ஊழி முதல்வன் - ஊழியை ஏற்படுத்தும் இறைவன். எப்பரிவு - எவ்வகை; எத்தன்மை. ஏத்துமின் - துதியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக