ஞாயிறு, 21 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 38 பிதற்றலைக் கைவிடேன்!


38.                        பிதற்றுஒழி யேன்பெரி யான்அரி யானை;    
                             பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்   
                             பிதற்றுஒழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னை;  
                             பிதற்றுஒழி யேன்பெருமைத்தவன் தானே.

     இறைவன் பெரியான்; அரியான். அவனை வழிபடுவதைக் கைவிட மாட்டேன். ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவனும் உருவம் உடையவனுமானவன்  சிவன். அவனைத் துதிப்பதைக் கைவிட மாட்டேன். எம்பெருமானான இறைவனை வழிபடுவதைக் கைவிட மாட்டேன். எப்போதும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கும் நானே பெரிய தவம் செய்தவன் ஆவேன். 




    விளக்கம் : பிதற்றுதல் - இறைவனை எப்போதும் நினைத்து வணங்குதல். தவம் - தவம் உடையேன். இறைவனை இடைவிடாது துதித்தல் தவமாகும் என்பது கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக