புதன், 24 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 42 சிவபெருமான் இல்லறத்தாரிடமும் வந்து பொருந்துவான்!


42.                        போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது  
                             நாயகன் நான்முடி செய்துஅதுவே நல்கும்;  
                             மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்   
                             வேயன தோளிக்கு வேந்துஒன்றுந் தானே. 

     சிவபெருமானை அடைந்து தோத்திரம் செய்பவர் பெறும் பயனாவது, நான்கு தலைகளை உடைய நான்முகன் படைத்த வண்ணமே திரும்பத் திரும்பப் படைக்கும் மாயையுடன் கூடி இல்லறப் பந்தத்தில் உழல்பவரே யாயினும், திரண்ட தோள்களையுடைய உமையின் கணவனான சிவபெருமான் வந்து பொருந்தலாம்.


     விளக்கம் :  மாயகம் - மாயாகாரியமான உலகம். வேயன தோளி - வேய் + அ(ன்)ன + தோளி; மூங்கில் போன்ற தோளையுடைய உமையம்மை. நான்முடிநாயகன் - நான்கு தலைகளை உடைய நான்முகன். 
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக