திங்கள், 22 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 40 உடலில் புகுந்து நின்றனன் இறைவன்.


40.                        குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்  
                             நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும் 
                             மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் 
                             புறம் சடம் செய்யான், புகுந்துநின்றானே.

     சிவபெருமான் திருவடியில் மிக்க விருப்புடையவராய் அவன் திருவடி உணர்வால் தாழ்ந்தடைந்து அத்திருவடியினை அடைய விரும்புவாராக. அப்பெருமான் நிறைந்த செம்பொன்னின் ஒளியைப் போன்றவன். வஞ்சனையால் மறைந்து குறும்பு செய்யாது வாழ்த்தும் மெய் அன்பர்களின் உடலைப் புறக்கணிக்காது அதில் அப்பெருமான் புகுந்து நின்றனன்.


     விளக்கம் :  குறைந்து அடைந்து - மிகத் தாழ்ந்து வணங்கி. புறம் சடம் செய்யான் - உடலைப் புறக்கணியான். மறைந்தடஞ் செய்யாது - மறைந்து அடம் செய்யாது; வஞ்சித்து மாறு செய்யாமல். குரை கழல் - ஒலிக்கும் கழல்; கழலணிந்த திருவடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக