ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ASTROLOGY - 37 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


11.  ஈஸ்வர ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினோறாவது ஆண்டாகும்.
2. ஈஸ்வர ஆண்டின் அதிதேவதை            : கௌமாரி 
3. அதிதேவதையின் நிறம்                          : பாடல வர்ணம்  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : ஆயிரம் சூரியன்களை ஒத்த ஒளி  
                                                                         பொருந்திய மேனி, வானத்தை  
                                                                         நோக்கிய திருமுகம், பல வர்ண 
                                                                         ஆடை, இரண்டு கைகள்.
5. ஈஸ்வர ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     கோபம் உடையவன், துக்கத்தின் உருவம், குணங்கள் நிறைந்தவன், புகழ் மிக்கவன், கலைகளில் திறமையும், நல்ல தன்மைகளையும் உடையவன்.



12.  வெகுதான்ய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பன்னிரண்டாவது ஆண்டாகும்.
2. வெகுதான்ய ஆண்டின் அதிதேவதை    : வைஷ்ணவி 
3. அதிதேவதையின் நிறம்                          : நீல நிறம்   
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கையில் அமிர்த கலசம், ஒளிரும்  
                                                                         மேனி, விரிந்த மார்பு, தாமரை 
                                                                         மலரையொத்த கண்கள்.
5. வெகுதான்ய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     வியாபாரத்தில் திறமையுடையவன், அரசர்களால் மதிக்கப்படுபவன், தானம் செய்வதில் ஈடுபாடுடையவன், சாத்திரங்களை அறிந்தவன், தானியங்கள் மற்றும் செல்வத்தைச் சேர்ப்பவன்.



13.  பிரமாதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதிமூன்றாவது ஆண்டாகும்.
2. பிரமாதி ஆண்டின் அதிதேவதை            : வாராஹி 
3. அதிதேவதையின் நிறம்                          : பச்சை 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : அகன்ற மார்பு, மாணிக்க 
                                                                         ரத்தினங்கள் நிறைந்த கழுத்தணி 
                                                                         அணிந்தவர், தார்மீக மனது 
                                                                         கொண்டவர்.
5. பிரமாதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லா பாக்கியங்களும் நிறைந்தவன். (ரதம், குதிரை, கொடி) சாத்திரங்களில் ஈடுபாடு, பகைவரை அழிப்பவன், அரசனுக்கு மந்திரியாவான், செய்நன்றி மறவாதவன். 



14.  விக்ரம ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினான்காவது ஆண்டாகும்.
2. விக்ரம ஆண்டின் அதிதேவதை              : இந்திராணி 
3. அதிதேவதையின் நிறம்                          : கோதுமை 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : பசுமையான கண்கள், நடுத்தர   
                                                                         உயரம், நீண்ட கைகள் மற்றும்  
                                                                         கால்கள்.
5. விக்ரம ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     கொடுமையான செயல்களில் அதிக ஆர்வமுடையவன், பகைவர்களின் சேனையைத் தன் வயப்படுத்துபவன், சாமார்த்தியசாலி, சூரன், தீரன், கொடையாளி, பகைவரை வெல்பவன்.



15.  விஷு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினைந்தாவது ஆண்டாகும்.
2. விஷு ஆண்டின் அதிதேவதை               : சாமுண்டி 
3. அதிதேவதையின் நிறம்                          : நீல நிறம்  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : முகத்தில் வடு, பூனைக் கண், 
                                                                         ஒளிரும் மேனி.
5. விஷு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     புகழ் பெற்றவன், மற்றவர்களால் நிந்திக்கப்படுபவன், பெரியோர்களால் தொடரப்படுபவன், பிறர் காரியங்களைச் செய்பவன், பலரைக் காப்பவன், மந்த புத்தியும் பேராசையும் சோம்பேறித்தனமும் உடையவன். 



16.  சித்ரபானு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினாறாவது ஆண்டாகும்.
2. சித்ரபானு ஆண்டின் அதிதேவதை         : அரோகன் 
3. அதிதேவதையின் நிறம்                          : கபில நிறம் 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : இரு கைகள், கூன் உடம்பு, 
                                                                         குத்திட்டு நிற்கும் கேசங்கள், பல   
                                                                         அணிகள் அணிந்தவர்.
5. சித்ரபானு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     பல நிறங்களுடன் கூடிய ஆடை மற்றும் மலர்களை அணிவதில் ஈடுபாடு கொண்டவன். பலவித மனோபாவம் உடையவன். நற்குணங்கள் மிக்கவன். கலைகளில் ஈடுபாடு கொண்டவன்.



17.  சுபானு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினேழாவது ஆண்டாகும்.
2. சுபானு ஆண்டின் அதிதேவதை              : பிராஜன் 
3. அதிதேவதையின் நிறம்                          : கபில வர்ணம். 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கருப்பு ஆடை அணிந்தவர்,  
                                                                         தாகத்தினால் களைப்படைந்தவர், 
                                                                         ஆட்டின் முகம் போன்ற முகம்.
5. சுபானு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     சுருட்டையான கேசம், அணுகுவதற்கு எளியவன், அழகிய மேனி, பகைவர்களை வெல்பவன், சிறந்த அறிவாளி, பணிவுள்ளவன், தூய மேனியுடையவன், நல்ல பெயரும் புகழும் மிக்கவன். 



18.  தாரண ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினெட்டாவது ஆண்டாகும்.
2. தாரண ஆண்டின் அதிதேவதை              : படரன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு   
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : நெடிய மேனி, தாமரை 
                                                                         மலரையொத்த கண்கள், நடனம் 
                                                                         மற்றும் வாத்தியங்களில் ஈடுபாடு 
                                                                         புலியின் கால்கள் போன்ற 
                                                                         கால்கள், யானையின் முகம்  
                                                                         போன்ற முகம்.
5. தாரண ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அயோக்கியன், சூரன், சஞ்சல புத்தியுடையவன், கலைகளைக் கற்றுணர்ந்தவன், உறுதி மிக்கவன், இகழத்தக்க செயல்கள் புரிபவன், செல்வந்தன்.



19.  பார்த்திவ (ப) ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பத்தொன்பதாவது ஆண்டாகும்.
2. பார்த்திவ ஆண்டின் அதிதேவதை          : பதங்கன் (சூரியன்) 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : நீள் கழுத்து, செந்நாயின் வயிறு 
                                                                         போன்ற வயிறு, தடியைவைத்துக் 
                                                                         கொண்டிருப்பவர், பருத்த உதடு.
5. பார்த்திவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     தன் செயல்களைச் செய்பவன், அரச தர்மம் அறிந்தவன், கலைகளில் திறமை மிக்கவன், சிறப்பாக வாழ்பவன், அரசகுலத் தோன்றலுமாவான்.



20.  விய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபதாவது ஆண்டாகும்.
2. விய ஆண்டின் அதிதேவதை                  : ஸ்வர்ணரன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : நீண்ட முகம், சிவந்த கண்கள், 
                                                                         நீண்ட கேசங்கள், சத்தியம் 
                                                                         பேசுபவர், அதிக செலவு 
                                                                         செய்பவர்.
5. விய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     சுகமற்றவன், துன்பங்களையே துய்ப்பவன், பயந்த குணமுடையவன், கடன் வாங்குவதே முக்கிய செயல், நிலையற்ற மனம், பெரிய செலவாளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக