புதன், 26 டிசம்பர், 2012

ASTROLOGY - 38 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


21.  சர்வஜித் ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியோராவது ஆண்டாகும்.
2. சர்வஜித் ஆண்டின் அதிதேவதை           : ஜ்யோதிஷ்மான் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : அழகிய கைகள், நீண்ட மூக்கு, நீள்  
                                                                        முகம், மெல்லிய உதடு, எல்லாச்  
                                                                        செயல்களையும் சாதிக்க வல்ல 
                                                                        தோற்றம். 
5. சர்வஜித் ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அரசனின் கௌரவம் காப்பவன், விழாக்களைக் கொண்டாடுபவன், மாசற்றவன், பருத்த உடம்பையுடையவன், மேனியழகு மிக்கவன், எப்பொழுதும் பகைவரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டவன்.



22.  சர்வதாரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியிரண்டாவது ஆண்டாகும்.
2. சர்வதாரி ஆண்டின் அதிதேவதை          : விபாஸன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சிவந்த கண்கள், உயரமான மேனி,  
                                                                        சிறுத்த உதடு, சிறிய கண்கள், 
                                                                        பயிர்த் தொழில் புரிபவர். 
5. சர்வதாரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     செல்வம், ஆள், அடிமை மிக்கவன், எல்லா யோகங்களையும் துய்ப்பவன், அழகிய மேனி கொண்டவன், இனிமையான உணவை உட்கொள்பவன், நற்குணங்கள் மிக்கவன் மற்றும் கொடியவனும் ஆவான்.




23.  விரோதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தி மூன்றாவது ஆண்டாகும்.
2. விரோதி ஆண்டின் அதிதேவதை            : கஸ்யபன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : மங்கிய கண்கள், பருத்த உடல்,  
                                                                        பருத்த இடுப்பு, சிறுத்த கழுத்து. 
5. விரோதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     ஆசையுடையவன், தேசாந்திரங்களில் சஞ்சரிப்பவன், குடும்ப சுகமற்றவன், அதிக அயோக்கியத்தனமுடையவன், மக்களுடன் ஒத்துச் செல்லும் மனநிலையுடையவன், சொந்த புத்தியற்றவன்.




24.  விக்ருதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தி நான்காவது ஆண்டாகும்.
2. விக்ருதி ஆண்டின் அதிதேவதை            : ரவி 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : நெடிய உருவம், அழகிய மேனி, 
                                                                        தவக்கோலம், ஒட்டிய வயிறு, 
                                                                        நீள் கழுத்து, சிவந்த கண்கள். 
5. விக்ருதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     செல்வமற்றவன், பயங்கரத் தன்மை கொண்டவன், நீண்ட கணுக்கால்களை உடையவன், அதிக ஆர்வம் கொண்டவன், நல்ல புத்தியற்றவன், பகைவர்களை உடையவன்.




25.  கர ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியைந்தாவது ஆண்டாகும்.
2. கர ஆண்டின் அதிதேவதை                     : சூரியன்
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : நான்கு கைகள், வரதம், அபயம், 
                                                                        பத்மம் கதையைக் கொண்டவர், 
                                                                        நதிக்கரை தேவாலயத்தில் 
                                                                        உள்ளவர்.
5. கர ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     காமம் மிக்கவன், அழுக்கடைந்த மேனி, கொடூர வார்த்தை மற்றும் அர்த்தமற்ற பேச்சுக்கள் உடையவன், வெட்கங்கெட்டவன், கட்டுப்பாடற்றவன், அதிக உயரமுடையவனுமாவான்.




26.  நந்தன ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியாறாவது ஆண்டாகும்.
2. நந்தன ஆண்டின் அதிதேவதை               : பானு 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சிவந்த கண்கள், நீண்ட கைகள், 
                                                                        வரதஹஸ்தம், நீள்மூக்கு, விபூதி  
                                                                        ருத்ராக்ஷம் அணிந்தவர். 
5. நந்தன ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     குளங்கள், குட்டைகள், கிணறுகள், வீடுகள் இவைகளைக் கட்டுபவன், அன்னதானப்பிரியன், மாசற்றவன், மனைவி மக்களால் இன்பம் துய்ப்பவன்.




27.  விஜய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியேழாவது ஆண்டாகும்.
2. விஜய ஆண்டின் அதிதேவதை               : ககன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : இரு கைகள், தாமரையையொத்த  
                                                                        மேனி, இடது பக்கப் பார்வை, 
                                                                        மருத மரத்தடியில் இருப்பவர்.  
5. விஜய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
              போர் புரிபவன், தைரியசாலி, நற்குணங்கள் மிக்கவன், அரசனால் வெகுமதிக்கப்படுபவன், சிறந்த பேச்சாளி, சிறந்த கொடையாளி, இரக்கமுடையவன், பகைவனை வெல்பவனுமாவான்.




28.  ஜய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியெட்டாவது ஆண்டாகும்.
2. ஜய ஆண்டின் அதிதேவதை                   : பூஷா 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : பருத்த இடுப்பு, சிவந்த கண்கள், 
                                                                        வரத அபயஹஸ்தம்.
5. ஜய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     பெரியவர்கள் பிரசங்கம் செய்யும்பொழுது வருந்துபவன், வெகுமதிக்கத் தக்கவன், வள்ளல், பகைவரின் கர்வத்தை ஒடுக்குபவன், காமம் மிகுந்தவன், மன வலிமை உடையவன்.



29.  மன்மத ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தி ஒன்பதாவது ஆண்டாகும்.
2. மன்மத ஆண்டின் அதிதேவதை             : ஹிரண்யகர்பன் 
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம்   
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தாமரை மலரையொத்த கண்கள், 
                                                                        திரண்ட புஜங்கள், வில்லும் 
                                                                        அம்பும் ஏந்தியவர், ஐந்து 
                                                                        குதிரைகள் மீது அமர்ந்தவர். 
5. மன்மத ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     சிறந்த அணிகலன்களை அணிந்தவன், பெண்களுடன் கேளிக்கை புரிபவன், இனிய சொல்வன்மை மிக்கவன், கலைஞன், நாட்டியம், பாட்டு இவைகளில் ஈடுபாடு உள்ளவன், நல்ல உணவில் நாட்டம் உள்ளவன்.




30.  துர்முகி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பதாவது ஆண்டாகும்.
2. துர்முகி ஆண்டின் அதிதேவதை             : மரீசி 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : இரு கரங்கள், வில்லுடன் 
                                                                        கூடியவர், தெத்துப் பற்கள், 
                                                                        பயங்கர உருவம், உதிக்கும்       
                                                                        சந்திரனைப் போல் ஒளி,  
                                                                        சோம்பேறியான தோற்றம். 
5. துர்முகி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     கொடூரமான மனம் உள்ளவன், அயோக்கியன், ஈன புத்தியுள்ளவன், பேராசைக்காரன், கோணலான முகம், கை, கால்கள் உள்ளவன், பாவச் செயல்களில் ஈடுபாடு உள்ளவன், கெடுதலான செயல்களையே செய்பவன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக