வெள்ளி, 7 டிசம்பர், 2012

TSUNAMI Warning in Japan : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.


     ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்த நாட்டின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹான்சு நகருக்கு அருகே உள்ள சென்டாய் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

     ரிக்டர் அளவுக் கோலில் 7.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக வீடு மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 



     நிலநடுக்கம் காரணமாக கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கடலோர நகரங்களில் ஒன்றான மியாகியில் 1 மீட்டர் வரை அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



     இதனையடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டு மட்டும் 9-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பானில் உள்ள அணு உலைகள் மூடப்பட்டுள்ளன.

நன்றி : தினகரன், கூகுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக