செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 68 நந்தி வழிகாட்ட நான் இருந்தேன்!


68.                        நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்; 
                             நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
                             நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்  
                             நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

     சிவபெருமான் திருவருளால் குருநாதர் என்ற தகுதியை அடைந்தோம். அப்பெருமானின் அருளால் மூலாதாரச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனை நாடினோம். உலகில் சிவனது அருள் எல்லாவற்றையும் செய்யும். அவன் வழியைக் காட்டியருள் செய்ய மூலாதாரத்திலிருந்து மேல் ஏறித் தலையின் மேல் நிலைபெற்றிருந்தேன்!



     விளக்கம் : இதற்கு மற்றுமொரு பொருள் வருமாறு : சிவன் அருள் செய்தலால் நாதன் எனப் பெயர் பெற்றோம். அந்நந்தியின் அருளால் ஆடு மேய்க்கும் மூலன் வடிவில் புகுந்தேன். அந்நந்தி அருள் என் செய்யும் என்றால், நந்தி வழிகாட்ட நான் இருந்து முந்தைய தொண்டு எல்லாம் முயல்கின்றேன். நந்தி நாடினேன் - நந்தி பெருமான் திருவருளால் இறந்த மூலனின் உடலில் புகுந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக